எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அனுமதியே இல்லை... எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் 3 மருத்துவ மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.எஸ் கல்லூரியின் மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் தாளாளர் வாசுகி சரணடைந்துள்ளார். அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.
இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications