சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 18ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி, கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கொலைவழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் சனிக்கிழமையன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்ட ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராம்குமாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ராயப்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் ராம்குமாரிடம், இன்று காலை 11.30 மணிக்கு எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி கோபிநாத் விசாரணை நடத்தினார்.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையில் ராம்குமாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி கோபிநாத். ராம்குமார் முழு சுய நினைவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவில் ராம்குமாருக்கு 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications