சுவாதி கொலையாளியை பார்த்தா இந்த நம்பர்ல போலீசை கூப்பிடுங்க...

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூளைமேடு இளம்பெண் சுவாதியை கொடூரமாக கொன்ற கொலையாளி பற்றி துப்பு கொடுப்பதற்கான, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிப்பவர்கள் பற்றி ரகசியம் காக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பணிக்கு செல்வதற்காக காத்திருந்த இன்போசிஸ் நிறுவன ஊழியரான சுவாதி என்பவர், கொடூரமாக, வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த மர்ம நபர் யார் என, போலீசார் 8 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

Swathi murder case: police issue contact numbers

இதற்கிடையே, சுவாதியை கொன்ற கொலையாளி குறித்து துப்பு கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கொலையாளி பற்றி விவரம் தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொண்டு, துப்பு கொடுக்கலாம் என்றும், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை வழக்கின் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது அவசியம் என்றும், சென்னை காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்:

கே. சங்கர் ஐபிஎஸ் - 8939966985.

எஸ்.மனோகரன் ஐபிஎஸ் - 9840962359, 9498178179

பி. பெருமாள் - 9443481933

கே.பி.எஸ் தேவராஜ் - 9840190505, 9498132707.

பி. கலிதீர்த்தன் - 9751804830, 9498127426

எஸ். முத்துவேல் பாண்டி - 9884070878, 9498104839.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+