சுவாதி கொலை வழக்கு.. ராம்குமாரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
சென்னை: இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது
புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராம்குமாரை நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளையும் ராம்குமாரையும் நீதிபதி நேரில் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே, ராம்குமாரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ராம்குமாரை ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications