ராம்குமாருக்கு 2வது முறையாக போலீஸ் காவல்.. ஒரு நாள் விசாரிக்க கோர்ட் அனுமதி
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ராம்குமாரை மீண்டும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டனர்.
இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ராம்குமாரை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளையும் ராம்குமாரையும் நீதிபதி நேரில் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே, ராம்குமாரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமாருக்கு எதிராக தடயங்களை உருவாக்கவும், ஆதரவாக உள்ள சாட்சிகளை அழிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வாதிட்டார்.
ராம்குமாரை சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும், கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்கவுமே இந்த காவல் கேட்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ராம்குமாரை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுப்பும் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ராம்குமார் தொடர்புடைய சி.சி.டி.வி காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி ராம்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications