மாமல்லபுரம் காவல் நிலையத்தில் திடீரென விசிட் அடித்த சைலேந்திர பாபு.. வெலவெலத்த போலீஸார்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Recommended Video
தமிழக டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். கடந்த வாரம காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில் பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக 3 மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக் காத்திட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழு வீச்சில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

விசாரணை
பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை உடனுககுடன் களைய வேண்டும் என்றார். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு திடீர் வருகை தந்தார். அங்கு
காவல் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறித்தும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.

காவலர்கள்
பின்னர் காவலர்களிடம் மாமல்லபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார், குற்ற நடவடிக்கையில் நடக்கும் முன் தடுத்த மாமல்லபுரம் ஆய்வாளர் மணிமாறனை பாராட்டி ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் காவல் நிலையத்தில் குற்ற நடவடிக்கைகள் நடக்காதவாறு கட்டுப்படுத்தி உள்ளதாகவும் குற்றச் செய்திகளை உடனுக்குடன் கண்டறிந்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

திருக்கழுக்குன்றம்
அதனையேடுத்து திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், கல்பாக்கம் உள்ளிட்ட ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் மக்களிடையே கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை வழங்கினார். தன்னுடன் பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி ஊக்கத்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக மாமல்லபுரம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை வடக்கு இணை ஆணையராக உள்ள ரம்யா பாரதி, நள்ளிரவில் சைக்கிளை எடுத்து கொண்டு வாலாஜா சாலை முத்துசாமி பாலத்தில் ஆரம்பித்து எஸ்பிளனேட் சாலை, மின்ட் தெரு, மூலக்கொத்தளம் பகுதி வழியாக வைத்தியநாதன் பாலத்தைக் கடந்து தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் துபாயில் இருந்து பாராட்டினார். இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் தருமபுரி மாவட்டத்தில் நல திட்ட உதவிகளுக்காக சென்றிருந்தார். அப்போது செல்லும் வழியில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது அப்போது பெரும் பரபரப்பையும் திமுக அரசுக்கு பாராட்டையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications