நாகை: குறுவை சாகுபடிக்கு 3வது ஆண்டாக 'நினைவஞ்சலி' செலுத்திய விவசாயிகள்!
நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்கு வியாழக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்
நாகையில் நடைபெற்ற காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் குறுவை சாகுபடி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி என எழுதப்பட்டிருந்த பதாகையின் முன்பாக விவசாயிகள் மெழுகுவத்தி ஏற்றி வைத்து, நினைவஞ்சலி பதாகைக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு. சேரன், பொதுச் செயலாளர் வி. தனபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது தமிழக விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து நதி நீர் பிரச்னைகளுக்கும் விரைவான தீர்வு காண வேண்டும்.

குறுவை சாகுபடி பாதிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கைவிடப்பட்டிருப்பதால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், வேளாண் பிரச்னைகள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.

13 விவசாயிகள் தற்கொலை
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. வேளாண் பிரச்னைகளால், கடந்த ஆண்டு மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் வேளாண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாகையில் பேரணி
விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ம்தேதி நாகை புத்தூரிலிருந்து, நாகை பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications