அண்ணாமலைக்கு முதுகெலும்பு இருந்தால்.. என் மீது கேஸ் போடட்டும்! சவால் விட்டு கொந்தளித்த டி.ஆர்.பாலு!
சென்னை: அண்ணாமலைக்கு முதுகெலும்பு ஒன்று இருக்குமானால் தன் மீது வழக்குத் தொடரட்டும் என சவால் விட்டு கொந்தளித்துள்ளார் டி.ஆர்.பாலு எம்.பி.
அண்ணாமலைக்கு தாம் அனுப்பிய நோட்டீஸ்க்கு இதுவரை பதில் இல்லை என்றும் நிச்சயம் சிவில் வழக்கு ஒன்றும், கிரிமினல் வழக்கு ஒன்றும் தாம் தொடர்வேன் என உறுதி தெரிவித்துள்ளார் டி.ஆர்.பாலு.

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் தன்னை தெரியும் என்றும் இப்படிப்பட்ட தன் மீது பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பேசுவதற்கு முன்பு அண்ணாமலை யோசித்திருக்க வேண்டாமா என வினவியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தில் என்ன சொத்து விவரங்களை காட்டியிருக்கிறேனோ அது மட்டும் தான் தன்னிடம் இருப்பதாகவும் அதைவிட கூடுதலாக ஒரு செண்ட் நிலம் வாங்கியிருந்தால் திமுகவினர் தன்னை தொங்கவிட்டு அடிக்கலாம் என ஆவேசம் காட்டினார்.
அண்ணாமலைக்கு சூடு சொரணை இருக்கிறதா என்றும் மான ரோஷம் இருக்கிறதா என்றும் அடுக்கிக்கொண்டே போன டி.ஆர்.பாலு, தாம் இன்னும் இறங்கி பேசிவிடுவேன் என்றும் நீங்கள் இருப்பதால் அது போல் பேசவிரும்பவில்லை எனவும் கூட்டத்தினரை பார்த்துக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை அசைத்து பார்க்கலாம் என்று பாஜகவும், அதிமுகவும் நினைத்தால் திமுக தொண்டன் பாஜகவையும், அதிமுகவையும் ஓட ஓட விரட்டி அடிப்பான் என டி.ஆர்.பாலு எச்சரித்தார்.
மிரட்டிப் பார்க்கும் வேலையை திமுகவினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதற்கெல்லாம் அஞ்சியவர்கள் தாங்கள் இல்லை எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்றிரவு கலந்துகொண்டு பேசிய டி.ஆர்.பாலு இதனைக் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications