தாசில்தார் டூ ஏட்டு.. போற இடமெல்லாம் மனைவிக்கு நெருக்கம்.. அதிரும் கள்ளக்குறிச்சி கணவனின் வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி: வங்கி அதிகாரி ரமணியின் கணவர், கள்ளக்குறிச்சி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. வங்கி அதிகாரியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது ரமணி.. விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த ரமணி, 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

வங்கி அதிகாரி: பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை திருமணம் செய்திருந்தார் ரமணி.. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இந்த கொலைக்கான விசாரணையை போலீசார் துவங்கிய நிலையில், அசோக் தலைமறைவாகியிட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியதையடுத்து, அசோக்கின் அப்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. இறுதியில், அசோக்கை சுற்றிவளைத்து போலீஸார், கைது செய்தனர்.
அப்போது போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "ரமணி என்னை கல்யாணம் செய்வதற்கு முன்பே திருமணமானவர். என்னுடைய ஆட்டோவில் வரும்போதுதான் ரமணியுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.
திருமணம்: ரமணி திருமணமாகி விவாகரத்தானவர் என்று தெரிந்துதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். விருத்தாசலம் வங்கியில் பணியாற்றிய ரமணி, பெரம்பலூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அதனால் பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்திலேயே பேங்குக்கு எளிதில் சென்றுவர, வாடகைக்கு வீடு எடுத்தோம்... அத்ந வீட்டில்தான், ரமணியும், குழந்தைகளும் இருந்தார்கள்.
உளுந்தூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த நான், வாரத்தில் ஒருநாள் மட்டும் கிருஷ்ணாபுரம் சென்று ரமணியையும் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவேன்... அப்போதுதான், ரமணி வேறு சில ஆண்களுடன் பழகுவது எனக்கு தெரிய வந்தது...
கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடியில் நாங்கள் ஒரு இடம் வாங்கியிருந்தோம்... அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக, குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றுவந்தோம். அந்த நேரத்தில், அங்கிருந்த துணை தாசில்தார் ஒருவருடனும் ரமணி நெருங்கி பழகிவிட்டார்.. அந்த நெருக்கம் குறித்து நான் ரமணியிடம் கேட்டேன்.
பழக்கவழக்கம்: "சும்மாதான் பேசுகிறேன்" என்று சொன்னார்.. ஆனாலும், 2 பேரும் நெருங்கிப் பழகியதை நானே கண்டுபிடித்து விட்டேன்.. இதற்கு நடுவில் சிறிய விபத்து ஒன்றிலிருந்து ரமணியை, போலீஸ் உதவி எஸ்.ஐ ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்... அந்த நிமிடத்திலிருந்து அந்த எஸ்.ஐ-யிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டார்.
இவர்கள் தவிர போலீஸ் ஏட்டு ஒருவருடனும் நெருக்கமாக பழகி வந்தார்.. எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார்.. இதை பற்றி ரமணியிடம் கேட்டபோதுதான், எங்களுக்குள் தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்: கடந்த 19-ம் தேதி, நான் வீட்டிற்கு போயிருந்தேன்.. அப்போதுகூட, யாரோ ஒரு ஆணிடம் பேசிக்கொண்டிருந்தார் ரமணி. அப்போது மறுபடியும் எங்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது.. கோபத்தில் ரமணியை அடித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.. ஆனால், அதற்கு பிறகுதான், கள்ளக்காதல்களுக்கு இடையூறாக இருக்கும் கணவன்களை, சம்பந்தப்பட்ட ஆண் நண்பர்களை வைத்தே மனைவிகள் கொலை செய்து வரும் செய்திகள் குறித்தெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தது.
ஒருவேளை, ரமணியும் அப்படி, அவரது ஆண் நண்பர்களை வைத்து கொலை செய்து விடுவாரோ? என்று பயந்தேன். அதனால், ரமணிக்கு முன்பே நான் முந்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்..
வாக்குமூலம்: பாலில் தூக்க மாத்திரையை கலந்தேன்.. சண்டை போட்டு வெளியே வந்துவிட்டதால், ரமணியை சமாதானம் செய்து, அந்த பாலை குடிக்க வைத்தேன்.. ரமணி தூங்கியதும் தலையனையை முகத்தில் அழுத்தி கொன்றுவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் அசோக்.












Click it and Unblock the Notifications