பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று குறைப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
''தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.44., 11.20., 11.37., மதியம் 12.20., 12.56., 2.32 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று காலை 11.43., 11.56., மதியம் 12.08., 12.47., 1.17., 1.32., 2.02., 2.15., 2.25., 2.45., 2.55., 3.05., 3.23 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் 13 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10.38., 10.56., 11.10., 11.30., 11.45., மதியம் 12.10., 12.43., 1.22., 1.35., 2.01., 2.23 மணிக்கு சென்னை கடற்கரை-தாம்பரம் வரை செல்லும் 11 மின்சார ரயில்களும் பல்லாவரம் வரை மட்டுமே செல்லும். சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40 மணி மற்றும் மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரம் வரை செல்லும் 2 மின்சார ரயில்களும், அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.00 மணி மற்றும் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் 2 மின்சார ரயில்களும் கடந்த சில நாட்களாக தாம்பரம்-செங்கல்பட்டு வரை சில ரயில் நிலையங்களிலும் மட்டுமே நின்று சென்றன.
ஆனால் வரும் 14 ஆம் தேதி முதல் இந்த 4 மின்சார ரயில்களும் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications