ஹாங்காங் சென்றுவிட்டு சென்னை திரும்பிய தாம்பரம் பெண்ணுக்கு கொரோனா அறிகுறி.. தீவிர சிகிச்சை
Recommended Video
சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பம் மாதம் முதல் சீனாவில் பரவியது. இது வுகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாம்பை உண்ணும் சீனர்களுக்கு பரவிவிட்டதாக தெரிகிறது. இந்த நோய்க்கு இதுவரை சீனாவில் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

நோய் பாதிப்பு
இந்த நோய் இதுவரை 17 நாடுகளுக்கு பரவியுள்ளது. நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். மேலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் அந்தந்த விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரோம்பேட்டை
இந்த நிலையில் சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க கடந்த வாரம் சென்றுவிட்டு நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிற்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

தனி அறை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பிரத்தியேக உடைகள் அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி அறை அமைக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை
அந்த பெண்ணையும் தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான சாதனங்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சீனாவில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications