சசிகலாவுக்காக ஜெயலலிதாவை மட்டம் தட்டும் அதிமுக நிர்வாகிகள்.. தம்பிதுரை இதில் லேட்டஸ்ட்
ஜெயலலிதாவின் திறமைகளை மட்டம் தட்டும் வேலையில் எதிர்க்கட்சிகளே ஈடுபடாத நிலையில், அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை: அதிமுகவை வைத்துத்தான் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றார்கள் என்று அக்கட்சி கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அம்மாதான் எல்லாம், மற்றதெல்லாம் சும்மா என்று இருந்து வந்த அதிமுக கட்சிகள் இப்போது ஜெயலலிதாவை மட்டம் தட்டும் வகையிலான பேச்சுக்களே அதிகம் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
ஜெயலலிதா மறைந்ததுமே, இந்த முனுமுனுப்புகள் சத்தமாக கேட்கத் தொடங்கின. சசிகலாதான், ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு காரணம் என்று பொன்னையன் கூறியதன் மூலம், இந்த கோஷம் அதிகாரப்பூர்வ அந்தஸ்தை பெறத் தொடங்கியது.

ஆரம்பித்துவிட்டனர்
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இந்த வார்த்தையை எந்த நிர்வாகியும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் மறைந்து ஒரு வாரத்திற்குள் இப்படியெல்லாம் அக்கட்சி நிர்வாகிகளால் பேச முடிந்ததை அக்கட்சி அடிமட்ட தொண்டர்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

தம்பிதுரை
இதன் உச்சமாக, இப்போது, தம்பிதுரை என்னவென்றால், அதிமுகவை வைத்துதான் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றார்கள் என கூறி அடுத்த குண்டை கொளுத்திப் போட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் வெற்றி
அதிமுகவை வைத்து என்று எந்த அடிப்படையில் தம்பிதுரை கூறுகிறாரோ தெரியாது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வழிவகுத்த பொதுத் தேர்தலின்போது, ராஜிவ்காந்தி கொலை சம்பவத்தால் திமுகவுக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டது. அதை அதிமுக அறுவடை செய்து பெரும் வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவின் தனி பாணி
ஆனால் பிறகு அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் எப்போதாவது ஒருமுறை நினைவு கூறப்பட்டாரே தவிர, முழுமையாக இல்லை. ஜெயலலிதாவிற்கு உருவாக்கப்பட்ட பிம்பம், அவரது பேச்சு திறமை, எதிர்க்கட்சிகளின் வலிமை குறைவு போன்றவற்றை பயன்படுத்தியே ஜெயலலிதாவை மக்கள் ஏற்கத் தொடங்கினர். ஆனால் சசிகலாவை முதல்வராக்கும் நோக்கத்தோடு, ஜெயலலிதாவை மட்டம் தட்டுகிறார் தம்பிதுரை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications