சென்னை ஏர்போர்ட் அறிவிப்பு பலகையில் தமிழ் நீக்கம்.. காலையில் மட்டும் என விமான நிலையம் விளக்கம்!
சென்னை விமான நிலைய வருகை, புறப்பாடு அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை : சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது முதல் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியான விஷயமாக சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் இதுவரை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன.

அறிவிப்பில் இருந்து தமிழ் நீக்கம்
ஆனால் நேற்று முதல் தமிழ் மொழியில் வரும் அறிவிப்பானது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி பயணிகளை அழைத்து செல்ல விமான நிலையம் வருவோரும் தங்கள் மொழியில் அறிவிப்பு இல்லாததால் அவதிக்கு ஆளாகினர்.

மக்களுக்காகவே தமிழ் மொழியில்
அந்தந்த மாநில மக்கள் பயன்பெறும் வகையில் தகவல்களை இந்தி, ஆங்கிலம் அல்லாது மாநில மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அதற்கும் விமான நிலையம் தடை போட்டிருப்பது ஏன் என்று பயணிகள் கொந்தளிக்கின்றனர்.

விமான நிலைய இயக்குநர் விளக்கம்
இந்நிலையில் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கம் ஏன் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். தாமதத்தை தவிர்க்கவே தமிழ் மொழியில் வெளியிடப்படும் அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தாமதத்தை தவிர்க்க
காலை நேரத்தில் அதிக அளவில் விமான போக்குவரத்து இருப்பதால் அந்த நேரத்தில் 3 மொழியில் அறிவிப்பு வருவதால் பயணிகள் தகவல்களை தெரிந்து கொள்ள தாமதம் ஏற்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார். இதனால் காலை நேரத்தில் மட்டும் இந்தி, தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications