எதுக்கு பேசனும்- அப்புறம் மன்னிப்பு கேட்கனும்.. ஈயம் பூசின, பூசாத மாதிரி திரை உலகத்தின் போராட்டம்
தமிழ் திரை உலகத்தினர் கன்னடர்கள் எதிர்பார்ப்பகளே என அஞ்சி மவுன போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னை: தமிழ் திரை உலகத்தினர் இன்று நடத்திய 'அரைநாள் கூத்து' போராட்டத்தில் புதியதாக மவுன அறவழிப் போராட்டத்தை கடைபிடிப்போம் என எவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
2008-ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விவாதத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதைக் கண்டித்து அப்போது சென்னையில் திரை உலகத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்களை உதைக்க வேண்டும் என்றார். அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த குசேலன் திரைப்படம் ரிலீஸானது.
கன்னடர்களை விமர்சித்த ரஜினிகாந்தின் குசேலனை திரையிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் மிரட்டின. இதனையடுத்து கன்னடர்களிடம் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதற்கு சத்யராஜ் போன்றோர்கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பாகுபலி-2 படம் வெளியீட்டின் போது கடந்த ஆண்டு சத்யராஜையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
வேறுவழியே இல்லாமல் சத்யராஜும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார். இதன்பின்னரே பாகுபலி-2 கர்நாடகாவில் ரிலீஸ் ஆனது. இன்றும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக திரை உலகத்தின் அரைநாள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜய், விக்ரம், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் என ஏராளமான நட்சத்திரங்கள் வந்தனர். பெரும்பாலான நடிகைகள் எட்டியே பார்க்கவில்லை.
நாங்களும் போராட்டம் நடத்தினோம் என காட்டுவதற்காகவே இந்த அரைநாள் கூத்து நடந்தேறியது. அத்துடன் இம்முறையும் ரஜ்னிகாந்த் போன்றவர்கள் ஏதாவது பேச போய் கன்னடர்கள் மீண்டும் கொந்தளிக்க வேண்டுமா? என கருதியோ என்னவோ 'மவுன அறவழி' போராட்டம் என அறிவித்தனர். ஆனால் யாரும் மவுனமாக இருக்கவில்லை. ஒரே அரட்டை கச்சேரிதான்.
இப்படி ஈயம் பூசினமாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் என்கிற போராட்டங்கள் தேவைதானா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications