எஸ்.எஸ்.எல்.சி தேர்வு: அனைவருக்கும் முதல் பாடம் ”தமிழ்”தான் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், "தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006 இல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1 இல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 1 ஆவது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும்.
அதன்படி படித்த அந்த மாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுத உள்ளனர். இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பல தடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மற்ற மொழிப்பாடங்கள்:
மேலும் பகுதி 2 இல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3 இல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப்பாடத்தில் விலக்கு:
தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனு கொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

பாடபுத்தக விநியோகம்:
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி அறிக்கை வழங்கல்:
அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாயம் எழுத வேண்டும்:
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10 ஆவது வகுப்பு தேர்வில் பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications