2 நாள் வெளிநடப்பு + அமளியுடன் முடிவடைந்த சட்டசபை.. மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததை ஒட்டி மறு தேதி குறிப்பிடாமல் அவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாமன்ற உறுப்பினர்களால் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் பதவி ஏற்றது. தமிழக சட்டசபையில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு கடந்த 3ம்தேதி நடந்தது. சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டனர்.

15வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரோசய்யா உரை வாசித்தார். இதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.
17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கூட்டம் நடைபெறவில்லை.
20ம் தேதி திங்கட்கிழமை முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். கடைசி நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
இந்த கூட்டத்தொடரில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாமன்ற உறுப்பினர்களால் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. மறுசீரமைப்பு, மறுசுழற்சி இல்லாத முறையில் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேயர் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மசோதாக்கள் நிறைவேற்றத்தைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
நான்கு நாட்கள் நடைபெற்ற நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்கட்சியான திமுக இரண்டு முறை வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications