அமளி துமளி... கூச்சல் குழப்பம் ஓய்ந்தது- சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் 15 சட்டசபையில் தமிழக பட்ஜெட் முதல் கூட்டத் தொடர் ஜூலை 25ம் தேதி துவங்கியது.
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 25ம் தேதி தாக்கல் செய்தார். 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை அரசு துறைகளின் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

தினசரியும் அமளி
சட்டசபையில் திமுக 89 உறுப்பினர்களைக் கொண்டு பலமான எதிர்கட்சியாக இருப்பதால் தினசரியும் கூச்சல் குழப்பம், அமளி துமளி என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. தினசரியும் வெளிநடப்பு பின்னர் அவைக்கு திரும்புதல் என எதிர்கட்சியினர் செயல்பட்டனர்.

79 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்
இந்த கூட்டத்தொடரின் போது தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் 79 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. சஸ்பெண்டை எதிர்த்து திமுக நடத்தி போராட்டம், போட்டி சட்டசபை, சஸ்பெண்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கையெழுத்து போட்ட கருணாநிதி
திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி ஒருநாள் மட்டும் சட்டசபை வளாகத்திற்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு திரும்பினார். சட்டசபையில் அவரது சர்க்கரநாற்காலி செல்வதற்கு கூட வழியில்லை என்று திமுகவினர் குற்றம் சாட்டினர்.

மேயர் தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

110 விதியின் கீழ் அறிவிப்பு
அரசு வேலை செய்யும் மகளிருக்கு 9 மாதம் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை இந்த முறையும் முதல்வர் .ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்புகளாக வெளியிட்டார்.

சிறுவாணி தனி தீர்மானம்
கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர், சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒத்திவைப்பு
கடைசி நாளான இன்று, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கூறினர். தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications