தனித்து போட்டியிட தயாரா... சட்டசபையில் மாறி மாறி சவால் விட்ட அதிமுக, திமுக
சென்னை: சட்டசபை என்றாலே ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டுவதும், எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்வதும்தான் வாடிக்கை. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலையில் சட்டசபை கூட்டம் தொடங்கியதும் சற்றுநேரம் வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தினர். அப்போது சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட தயாரா' என, அதிமுக, திமுக உறுப்பினர்கள் மாறி மாறி சவால் விட்டும், தனித்து போட்டியிடத் தயார் என்று சொல்ல, அவர்களில் யாரும் முன்வரவில்லை.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் பேசிய திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன். தேர்தல் நோக்கத்துடன் பேசுவதாக அமைச்சர் வைத்தியலிங்கம் குறுக்கிட்டார். மேலும் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் வைத்தியலிங்கம் சட்டசபையில் கூறினார்.
மக்கள் யாருக்கு பாடம் புகட்டுவார்கள் என பார்ப்போம் என பதில் அளித்த அன்பழகன், 1996ம் ஆண்டு பர்கூரில் போட்டியிட்டு தோற்றவர் அதிமுக தலைவர் ஜெயலலிதா. கூட்டணிகளை தவிர்த்து போட்டியிடத் தயாரா என பரஸ்பரம் இரு கட்சிகளும் கேள்வி எழுப்பி கொண்டனர்.

சவால் விட்ட துரைமுருகன்
தி.மு.க., - துரைமுருகன்: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக, நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும், மக்களிடம் எடுபடாது.
சென்னையில், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை என, மழை நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நீங்கள் நுழைய முடியாது. அப்பகுதிகளில், தனியாக சென்று நீங்கள் ஓட்டு கேட்கமுடியுமா; நான் சவால் விடுகிறேன்.

வெள்ள அரசியல்
அமைச்சர் பன்னீர்செல்வம்: இது, சவால் அல்ல; சவடால். டிசம்பர் 1ம் தேதி பெருமழையினால் வெள்ளம் ஏற்பட்டது என்பது, மக்களுக்கு தெரியும். நீங்கள், அதை அரசியலாக்க பார்ப்பதும் தெரியும்.

அரசியல் ஆதாயம்
அமைச்சர் வைத்திலிங்கம்: வெள்ளத்தை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு, மக்கள் சரியான பாடம்புகட்டுவர்.

பாடம் புகட்டுவார்கள்
தி.மு.க., - அன்பழகன்: யாருக்கு பாடம் புகட்ட உள்ளனர் என்பது தேர்தலில் தெரியும்; 1996 தேர்தலில், பர்கூரில் தோற்றுள்ளீர்கள்.

லோக்சபா தேர்தலில் பாடம்
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தி.மு.க.,வை இனி எந்த நேரத்திலும், மக்கள் ஏற்க மாட்டார்கள். இதை லோக்சபா தேர்தலிலேயே, மக்கள் உணர்த்தி விட்டனர். அதே நிலை, சட்டசபை தேர்தலிலும் ஏற்படும்.

தனித்து நிற்க தயாரா?
அமைச்சர் வைத்திலிங்கம்: கூட்டணிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; தைரியமிருந்தால், தனித்து நிற்க தயாரா?
துரைமுருகன்: நீங்கள் எல்லாரையும் கழற்றி விட்டு, தனித்து நிற்க தயாரா?

சவாலை ஏற்க தயாரில்லை
திமுக, அதிமுக கட்சி உறுப்பினர்கள் மாறி மாறி சவால்தான் விட்டார்களே தவிர யாரும் சவாலை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிற்கு பெரு மழை வெள்ளமும், அதை தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று பொதுக்குழுவில் அறிவித்தார் ஜெயலலிதா. திமுக தலைவர் கருணாநிதியும் மெகா கூட்டணி அமைக்கவே விரும்புகிறார் என்பதால் இரு கட்சி உறுப்பினர்களும் நேற்று வெறுமனே சவால் விட்டு பேசினர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications