பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி? சீமானின் 'மாமா' நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
சென்னை: பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சீமானின் நாம் தமிழர் கட்சி இணைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது வரலாறு என்றும் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்மையில் நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சீமான், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!" என பாசமழை பொழிந்திருந்தார்.

இந்த நிலையில் தந்தி டிவி சேனலுக்கு நயினார் நாகேந்திரன் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான் எனது மிக முக்கியமான இலக்கு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சவாலான பணி காத்திருக்கிறது; கூட்டணி கட்சிகளோடு நட்புறவோடு இருக்க வேண்டும்; தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
பாஜக தலைவராக நான் பொறுப்பேற்றதால்தான் அதிமுக கூட்டணி வந்தது என்று கூட எடுத்துக் கொள்ளலாம். கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என சொல்ல முடியாது. இயற்கையாவே பாஜக- அதிமுக கூட்டணி உருவாகி இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக தொடர வேண்டும், அதே போல சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது என் எண்ணம். மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் கூட அத்தகைய கட்சிகளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தன என்பது கடந்த கால வரலாறு. ஆகையால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கூட்டணிக்கு அழைக்கிறேன். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்தெந்த கட்சிகள், பாஜக கூட்டணிக்கு வரும் என பொறுத்திருந்து பாருங்கள்.
லோக்சபா தேர்தலில் பாமகவும்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டது. தற்போதும் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
சீமான் குழந்தைக்கு சீர் செய்ய என்ன காரணம்? தாக்கூருக்கு அருகதை இல்லை! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications