தமிழக சட்டசபையில் 2016 -17 திருத்தப்பட்ட பட்ஜெட்: நிதியமைச்சர் ஓ.பி.எஸ் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவரும் அவையில் அமர்ந்திருந்து ஓபிஎஸ் வாசித்த பட்ஜெட் உரையை கவனித்தனர்.
கடந்த மே 16ம் தேதி தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

புதிய சட்டசபையின் முதல் கூட்டம், ஜூன் 16ம் தேதி நடந்தது. ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். பின்னர், ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் துறை வாரியான மானியக்கோரிக்கைகள் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
அநேகமாக, இந்த தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. பல பிரச்சனைகளை எழுப்ப உள்ளது. ஏனேனில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யப்போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது. எனவே பேரவையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications