தமிழகம் இப்போது மின் மிகை மாநிலமாகிவிட்டது! - தமிழக அரசின் 100 நாள் சாதனை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று இன்றுடன் (புதன்கிழமை) 100 நாட்கள் ஆவதையொட்டி 'நிலையான ஆட்சி-நிரந்தர வளர்ச்சி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் முற்றிலும் தள்ளுபடி, 16,94,145 விவசாயிகள் பயன்.
  • அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.91 கோடி மின் நுகர்வோர்கள் பயன், ஆண்டொன்றுக்கு 1,607 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியம்.

500 மதுபானக்கடைகள் மூடல்

500 மதுபானக்கடைகள் மூடல்

  • கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்வு. 78,378 கைத்தறி மின் நுகர்வோர்கள் பயன்.
    • விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்வு. 98,712 விசைத்தறி மின்நுகர்வோர்கள் பயன்.
      • தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு.
        • டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக்கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு. 500 கடைகள் மூடப்பட்டுள்ளன.
மின்மிகை மாநிலம்

மின்மிகை மாநிலம்

  • மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை.
    • தமிழ்நாட்டிற்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அலகு நாட்டிற்கு அர்ப்பணிப்பு.
      • மின் நுகர்வோர் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம்.
        • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 4,405 கோடி ரூபாய் நிதி உதவி.
          • டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக 54.65 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 1,37,314 விவசாயிகள் பயன். 64.30 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா சாகுபடி சிறப்பு திட்டம்.
மெட்ரோ ரெயில் விரிவாக்கம்

மெட்ரோ ரெயில் விரிவாக்கம்

  • 27,415 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப்பாசனம் 63.36 கோடி ரூபாய் மானியம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடம்-1 வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோநகர் வரை விரிவாக்கப் பணிகள் 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடக்கம்.
      • முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,61,886 நபர்களுக்கு 239 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை.
        • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 2,01,533 பெண்களுக்கு 180.98 கோடி ரூபாய் நிதி உதவி.
          • அம்மா திட்ட முகாம் மூலம் 1,99,209 மனுக்களுக்கு உடனடி தீர்வு.
            • 31.12 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.
              • 17 அமைப்புசாரா நலவாரியங்களில் 69,764 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, 99,703 பயனாளிகளுக்கு 40.45 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
மீனவ குடும்பங்களுக்கு உதவி

மீனவ குடும்பங்களுக்கு உதவி

  • விடுதலை போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாய் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்வு.
    • மீன்பிடி தடைக்காலத்தில் 1,53,149 மீனவ குடும்பங்களுக்கு 30.63 கோடி ரூபாய் நிவாரண உதவி.
      • 3.8.2016 அன்று அதிகப்பட்சமாக 31.77 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை.
        • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 47,830 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்.
          • இணையவழி சேவைகளை குடிமக்கள் பெறுவதற்கு தமிழக காவல்துறையின் கைப்பேசி செயலி.
            • மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க 890 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
              • விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்க 182.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+