தமிழக பட்ஜெட் 2015-16 முக்கிய அம்சங்கள்
-அம்மா வழி காட்டுதல்படி வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ்
-2016 தேர்தல் எதிரொலி வரிச்சலுகைகள் நிறைய அறிவிப்பு
-நாலடியார் பாடி பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் முதல்வர் ஓ.பி.எஸ்
-பட்ஜெட் தாக்கலுடன் சட்டசபை ஒத்திவைப்பு...
-வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவிப்பு
-அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களில் விரிவுபடுத்தப்படும்.
-250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
-தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி வரும் நிதியாண்டில் 9 % ஆக உயரும்
-பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு 140.12 கோடி ஒதுக்கீடு
-இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு
-சுற்றுலாத் துறையில் தமிழகம் 2வது இடம்
-2 லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்
-107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
-10 எச்.பி மோட்டார் பம்புக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு
-ஏலக்காய் மீதான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பு
-எல்.இ.டி விளக்குகளுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு
-சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு
-இலங்கை அகதிகள் நலனுக்கு ரூ.108 கோடி நிதி
-பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி ஒதுக்கீடு
-பள்ளி கட்டமைப்புக்கு ரூ.450.96 கோடி ஒதுக்கீடு
-தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை- செல்போன்களுக்கு வரி குறைப்பு!!
-நகர்ப்புற ஊராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்குரூ.133.33 கோடி நிதி ஒதுக்கீடு
-பன்றிக் காய்ச்சல், டெங்கு, தொற்று நோய் பரவாமல் அரசு கட்டுப்படுத்தியுள்ளது
-தேசிய சுகாதார இயக்க மேம்பாட்டிற்காக ரூ.1347.67 கோடி நிதி
-மீன்பிடி தடை செய்யப்பட்ட காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு உதவ ரூ.183 கோடி நிதி
-ஏழை கர்ப்பிணி பெண்களின் நிதி உதவி திட்டத்திற்கு ரூ.668.32 கோடி

-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி
-மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்
-குழந்தைகள் இறப்பு விகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்துள்ளது
-முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு
-காவல்துறைக்கு ரூ.5,608 கோடி நிதி ஒதுக்கீடு
-வேளாண் துறைக்கு ரூ.6,618 கோடி நிதி ஒதுக்கீடு
-சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615 கோடி நிதி ஒதுக்கீடு
-தூய்மை இந்தியா திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு ரூ.100 கோடி
-12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி ஒதுக்கீடு
-தேசிய கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ.343 கோடி நிதி
-கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு
-பேரூராட்சிகளில் சாலை மேம்பாட்டிற்கு ரூ.140.32 கோடி நிதி
-திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ.109 கோடி நிதி
-மாணவ, மாணவியரின் இலவச பேருந்து பயண மானியத்திற்கு ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு
-தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
-தமிழக பட்ஜெட் கூட்டம் - விஜயகாந்த் வரவில்லை
-விஜயகாந்த்தைத் தவிர மற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் பங்கேற்க முடியவில்லை
-விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது - ஆனால் "ஆப்சென்ட்"
-சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு
-இலவச லேப்டாப் வழங்க ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு
-உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி
-மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ரூ.400 கோடி நிதி
-குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு
-வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
-முதல்தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்க ரூ.100 கோடி
-ரூ.17,134 கோடியில் 7 புதிய முதலீட்டு திட்டங்கள் தொடங்கப்படும்
-ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையத்தளம் தொடங்க முடிவு
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications