For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Budget 2020 | கல்வி முதல் விவசாயம் வரை அதிமுக அரசின் 2020-21 தமிழக பட்ஜெட்

    சென்னை: தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசு இன்று தாக்கல் செய்திருப்பது கடைசி முழுநீள பட்ஜெட் ஆகும்.

    இதனால் பல்வேறு புதிய அறிவிப்புகளை துணை முதல்வர் ஓ பன்னீல்செல்வம் வெளியிட்டுள்ளார். கல்வித்துறைக்கு அதிக 2020-21 -ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

    TN Budget: TN Budget: "இது பாமக பட்ஜெட்".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்!

     11,894 கோடி நிதி

    11,894 கோடி நிதி

    கவனிக்கத்தக்க அம்சமாக வேளாண்துறைக்கு ரூபாய் 11,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ. 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் பாசன திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

    சாலை கட்டமைப்பு

    சாலை கட்டமைப்பு

    1,364 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ 11,000 கோடி வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ 15,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ. 12,301 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ 5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மொத்த செலவு

    மொத்த செலவு

    இந்நிலையில் தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் ஆக உள்ளதாக கூறினார். வருவாய் பற்றாக்குறை ரூ. 22,225 கோடி என்றும் அவர் கூறினார்.

    7.27 சதவிகித வளர்ச்சி

    7.27 சதவிகித வளர்ச்சி

    2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது என்றும் 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது என்றும் நிதியமைச்சர் கூறினார். இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்த நிதியமைச்சர்,. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

    English summary
    tamil nadu budget 2020: What is the total revenue of Tamil Nadu? How much does it cost, what is the Economic growth of tamil nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X