பெரம்பூரில் மக்கள் நீதி மய்யம் அபாரம்.. அதிமுகவுடன் கடும் போட்டி.. அமமுக வெற்றிவேல் பரிதாபம்
Recommended Video
சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் அதிமுகவுக்கு நிகரான வாக்குகள் பெற்று மக்கள் நீதி மய்யம் 3வது இடத்தில் உள்ளது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிகை நிலவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகளுடன் 22 தொகுதி இடைத்தேர்தலில் 19 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முதல்சுற்று முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
திமுக வேட்பாளர் அசோகன் 5302 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் சம்பத் 1824 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷிணி 1313 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. அமமுக வேட்பாளர் வெற்றிவேல் 648 வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் மெர்லின் சுகந்தி 395 வாக்குகள் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications