ஓ.பி.எஸ் கூட்டும் அமைச்சரவை கூட்டம்- ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை திரும்பும் அமைச்சர்கள்!
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் இன்று சென்னை திரும்புகின்றனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்காக இன்று இரவு அமைச்சர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புகின்றனர்.

இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடரின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் 23 ஆம் தேதி தொடங்குவதாக கூறப்படுகிறது. 23 ஆம் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றி அறிவிப்புகளை வெளியிடுவார்.
மேலும் அரசின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் பேசுவார். பொதுவாக சட்டசபை கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்படும். அந்த வகையில் ஆளுநர் உரை பற்றி இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழக முதல்வராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற முதல்வர் பன்னீர்செல்வம் அக்டோபர் மாதம் முதலாவது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறுவது 2வது அமைச்சரவைக் கூட்டமாகும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications