வாச்சாத்தி மக்கள் 105 பேருக்கு கூடுதல் நிவாரணம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: வாச்சாத்தி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட 105 பேருக்கு தலா 60,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 ஆம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனையின் போது, அவ்வூர் மக்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 407 நபர்களுக்கு 1 கோடியே 44 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொகுப்பு வீடுகள், குடும்ப அட்டைகள், வீட்டு மின் இணைப்பு, தெரு விளக்கு, விவசாய மின் இணைப்பு, குடிநீர் மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, தொழில் மின் இணைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டன.
வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சோதனைக் குழுவைத் தாக்கியதாக வனத்துறை அலுவலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1999 ஆம் ஆண்டு தருமபுரி காவல் துறையினரால் அரூர் நீதிமன்றத்தில் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 105 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை ஏதும் நடைபெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு அரூர் நீதிமன்றத்தால் 15.11.2012 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட 77 நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையான 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கிட உத்தரவிட்டதை அடுத்து இதற்கான ஆணை 11.9.2014 அன்று பிறப்பிக்கப்பட்டது.
வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் காரணமாக தாங்கள் இதுகாறும் பட்ட இன்னல்களை மனதில் கொண்டு தங்களுக்கு கருணை அடிப்படையில் மேலும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று என்னை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 105 நபர்களுக்கும் தலா 60,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
வாச்சாத்தி கிராமம்
தருமபுரி மாவட்டம் அரூர்க்கு அருகில் உள்ள மலைவாழ் கிராமம் வாச்சாத்தி. 300 குடும்பங்களை கொண்ட பழங்குடியினர். இவர்களின் தொழில் காடுகளில் உள்ள சின்ன சின்ன மரங்களை வெட்டி அதை நகரங்களுக்கு கொண்டு வந்து விற்று ஜீவணம் செய்வது. விவசாய வேலை செய்வது, ஆடுமாடுகளை கொண்டு ஜீவனம் செய்வது தான் இந்த கிராம மக்களின் நிலையே.
மரம் வெட்டிய கும்பல்
வாச்சாத்தி மலைவாழ் கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள சித்தேரி மலையில் அடர்ந்த காட்டில் சந்தனமரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதனை மரக்கடத்தல் கும்பல் வெட்டி கடத்தின. இந்த கும்பல் மரங்களை வெட்ட வாச்சாத்தி கிராம மக்களை பயன்படுத்திக்கொண்டன. வுறுமையில் இருந்த மக்கள் மரம் வெட்டி தந்தால் பணம் கிடைக்கிறதே அதுவும் தினக்கூலியை விட அதிகமாக ஒருநாளைக்கு 100 ரூபாய் கிடைக்கிறதே என அம்மக்கள் மரங்களை வெட்டி தந்தனர். அந்த மரங்கள் வனத்துறை அதிகாரிகள் ஆசியோடு செக்போஸ்ட்டுகள் தாண்டி நகரங்களுக்குள் போய்விடும். காவல்துறையும் இதை கண்டுக்கொள்ளாது.
கூட்டுக்குழு ரெய்டு
இதனிடையே மரம் கடத்துபவர்களை கைது செய்யவும் மலைவாழ்மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு ரெய்டு செய்து கைது செய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. 1992 ஜூன் 20ந்தேதி வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் வாச்சாத்தி கிராமத்தில் நடத்திய சோதனையில் கொடூரம் அரங்கேறியது.
அரங்கேறிய கொடூரம்
ரெய்டு என்ற பெயரில் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தெருவுக்கு வந்தன. வீட்டில் இருந்த இளம் பெண்களை காம வெறி பிடித்த வனத்துறை, காவல்துறையில் இருந்த சிலர் தூக்கிக்கொண்டு போய் ஊரின் குளக்கரையில் வைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
வழக்குப் பதிவு
பின்னர் 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 சிறுவர்களை கைது செய்து இவர்கள் சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தார்கள், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது. இந்த விவகாரம் மலைவாழ் மக்கள் சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு தெரியவந்து அவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர்.
திறக்கப்படாத கதவுகள்
1992 ஜீன் 22ந்தேதி, அரூர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. நடந்தது என்ன என அன்றைய ஜெயலலிதா அரசிடம் அறிக்கை கேட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி நல ஆணைய தென்மண்டல தலைவி பாபதியும் விசாரணை செய்து அந்த கொடூரத்தை பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
அறிக்கையை படித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும்மென உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து தங்களது சகாக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மிரட்ட தொடங்கினர். இதனால் வழக்கு 1996ல் சி.பி.ஐ விசாரிக்க தொடங்கியது.
அடையாளம் காட்டிய பெண்கள்
தங்களை பலாத்காரம் செய்தவர்களை 18 பெண்கள் அடையாளம் காட்டினர். காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையை சார்ந்த 269பேரை குற்றவளியாக்கி வழக்கை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ நடத்த தொடங்கின.
நீதிமன்றம் வந்த 213 பேர்
முதல் 155 பேர் வனத்துறையை சார்ந்தவர்கள், 156 முதல் 263 வரை காவல்துறையை சார்ந்தவர்கள், 264 முதல் 269 வரை இருப்பவர்கள் வருவாய்துறையை சார்ந்தவர்கள் என 269 பேர் மீது வழக்கு நடந்தது. விசாரணையில் இருக்கும் போது பல குறுக்கீடுகள், இழுத்தடிப்புகள் எனச்சென்றது. வழக்கு நடக்கும்போதே 53பேர் இறந்துவிட்டதால் 213 பேர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
தாமதிக்கப்பட்ட நீதி
19 வருடங்களாக வாச்சாத்தி மக்கள், பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் காத்திருந்தனர். கடைசியில் 2011 செப்டம்பர் 29ந்தேதியன்று தருமபுரி மாவட்ட நீதிபதி குமரகுரு தீர்ப்பு தந்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள். அதில் பலாத்காரத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை, 3 ஆயிரம் அபராதம், வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் கீழே தண்டனை தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications