பீடையெல்லாம் ஒழிஞ்சு போச்சு – தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேச்சு!
நெல்லை: காங்கிரசை சுற்றியிருந்த பீடைகள் விலகியதால் காங்கிரஸ் தப்பி பிழைத்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஜி.கே.வாசன் குறித்து கருத்து தெரிவித்தார்.

விட்டுச் சென்ற சிலர்:
அதில், " நம்மை விட்டு சிலர் சென்றிருக்கின்றனர். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பெரியாரை வைத்து நான் எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் அது வெறும் அறிமுகத்திற்குதான்.

கடின உழைப்பு அவசியம்:
என்னுடைய உழைப்பே நான் நிலைத்து நிற்க காரணம். இது போல் அரசியலுக்கு வருபவர்கள் தங்கள் தந்தை, முன்னோர்கள் பெயரை ஒரு அறிமுகத்திற்காக பயன்படுத்தி கொள்ளலாம். கட்சியில் நிலைத்து நிற்க வேண்டுமானால் கடின உழைப்பு தேவை.

நந்திகள் ஒழிந்தன:
காங்கிரஸ் பலவீனப்பட்டு இருந்த நிலையில் நம்மை சுற்றியிருந்த நந்திகள் தற்போது ஓழிந்துள்ளன.

கட்சியின் செல்வாக்கு:
வாக்கு வங்கி என்பது நிலையற்றது. காங்கிரசின் வாக்கு வங்கு 4 சதவீதம் என தெரிவிக்கின்றனர். வாக்கு வங்கியை வைத்து கட்சியின் செல்வாக்கை மதிப்பிட முடியாது.

மோடி அலைப் பிரச்சாரம்:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி மோடி என பொய் பிரச்சாரம் செய்து ஒரு அலையை உருவாக்கி பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. பொய் பிரச்சாரம் செய்த ஹூட்லர், முசோலினி உள்ளிட்ட சர்வதிகாரிகளை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பது உலகம் அறிந்தது.

மூத்த தலைவர்களை ஒழிக்கும் மோடி:
மோடி ஒரு பக்கம் கட்சியின் மூத்த தலைவர்களை ஒழித்து வருகிறார். மறுபக்கம் மாநிலகட்சிகளை ஓழிக்க திட்டம் போட்டு வருகிறார்" என்று காட்டமாக பேசியுள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications