ஜெ.வை சந்தித்த டிஜிபி, கமிஷனர் ஜார்ஜ்- பதவியேற்பு விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8 மாதகாலமாக எந்த அரசு அதிகாரியையும் ஜெயலலிதா சந்திக்காமல் தவிர்த்து வந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐ.பி.எஸ் அதிகரிகளும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போயஸ் தோட்டம் முன்னர் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர். தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜெயலலிதா வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பதவி ஏற்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வந்த நாள் முதல் அதிகாரிகள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். தற்போது வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் போயஸ் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications