தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. ஜூன் 4 முதல் மாறப்போகுது வானிலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்தவிட்ட போதிலும் தமிழகம்முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.
நேற்று திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து இருந்தது.

இனி வரும் சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையோர மாநிலங்களில் சராசரி வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்றும், பொதுமக்கள் 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு உள்தமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே இன்று பிற்பகல் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'ஜூன் 4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். ஜூன் 6, 7-ம் தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.' என்றும் கூறியுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications