தமிழகத்தில் மீண்டும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் ஜி.பிரகாஷ், நகராட்சி நிர்வாகத்துறை மேலாண் இயக்குனராக சந்திரகாந்த் பி.காம்பிளேக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.
சந்திரகாந்த் பி.காம்பிளே தமிழ்நாடு சிமெண்டு கழக நிர்வாக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது "கோ-ஆப்டெக்ஸ்" நிறுவன நிர்வாக மேலாண் இயக்குனராக பணியாற்றும் டி.என்.வெங்கடேஷ் மறு உத்தரவு வரும் வரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்து உள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக மேலாண் இயக்குனராக முன்பு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பபட்டிருந்தார். அங்கும் அவர் நேர்மையாக செயல்பட்டதால், அவரை தூக்கி அதிகாரமே இல்லாத அறிவியல் நகர துணைத் தலைவராக நியமித்தனர். இந்த நிலையில்தான் கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அவரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்தது. ஆனால் அதிலும் அவரை ஈடுபட விடாமல் தமிழக அரசு அலைக்கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications