செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!
சென்னை: 2016ம் ஆண்டு பார்க்க வேண்டிய உலகின் முக்கிய இடங்களின் வரிசையில் தமிழ்நாட்டுக்கு 24வது இடத்தைக் கொடுத்துள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை ஆகியவற்றையும் நியூயார்க் டைம்ஸ் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வரலாறு, ருசியான சாப்பாடு, கோவில்கள் ஆகியவை குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ். இந்தப் பத்திரிகையின் கடந்த ஆண்டு பட்டியலில் சென்னைக்கு மட்டும் இடம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் டைம்ஸ்
உலகப் புகழ் பெற்ற ஆங்கில இதழ்களின் வரிசையில் இருப்பது நியூயார்க் டைம்ஸ்.. இந்த இதழ் வருடா வருடம் ஜனவரி மாதத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக போக வேண்டிய நாடுகள்,. நகரங்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறது.

2016ல் கண்டிப்பாக போக வேண்டிய இடம்
அந்த வரிசையில் தற்போது 2016ம் ஆண்டு போயாக வேண்டிய இடங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு மட்டுமே இடம் பெற்றுள்ளது.

24வது இடத்தில் தமிழ்நாடு
மொத்தம் 52 இடங்களை அது பட்டியலிட்டுள்ளது. அதில் 24வது இடத்தில் தமிழ்நாடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பற்றி அது புகழ்ந்தும் எழுதியுள்ளது.

கலாச்சாரங்களின் மாநிலம்
தமிழகம் குறித்து அது கூறுகையில், இந்தியாவின் மிகப் பெரிய கலாச்சார சங்கமம் தமிழ்நாடு. இந்த மாநிலத்தின் சில நகரங்கள் மிகச் சிறியவையாக இருந்தாலும் கூட மிகப் பெரிய கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண்டவையாகும்.

கோவில்கள்
தமிழகத்தின் மிகப் பெரிய கலாச்சார உதாரணம் கோவில்கள்தான். செட்டிநாடு அதன் மற்றொரு பெருமை. இங்கு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 18வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான அரண்மனை வீடுகள் இன்றும் உள்ளன.

தலைவாழை இலை சாப்பாடு
தமிழகத்தின் இன்னொரு பெருமை அதன் சாப்பாடு. தலைவாழை இலையில் சாப்பாடு பரிமாறி சாப்பிடுகிறார்கள். செட்டிநாடு சமையல் இன்னும் சிறப்பானது.

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும் இந்த கட்டுரையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவிலான கோபுரங்களைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான் என்று அதில் புகழப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை
கடந்த ஆண்டு பட்டியலில் சென்னை மாநகரம் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications