தமிழக சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டி... ராகுல் அறிவிப்பு
ராமநாதபுரம்: வரும் சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் 16வது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல், லோக்சபா தேர்தலைப் போலவே தமிழக சட்டசபைத் தேர்தலையும் காங்கிரஸ் தனித்து எதிர் கொள்ளும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

ஐ எம் ஹேப்பி....
பலஆண்டு காலத்துக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தலைவர்கள் தலைமையின்கீழ் தொண்டர்கள் பணியாற்றுவதை கண்டு பெருமைப்படுகிறேன்.

நல்லாட்சி அமைப்போம்...
நாடாளுமன்றத் தேர்தலை போன்று தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டசபைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம். நீங்கள் விரும்பும் நல்லஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவோம்.

குஜராத்தை விடச் சிறந்தது தமிழகம்...
தமிழக மக்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். ஆனால் மோடி குஜராத் மாநிலத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழகத்தை, தமிழர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஆட்சிக்கு...
தற்போது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கிறது. மாநில கட்சிகள் அங்கு ஆட்சி அமைக்கப்போவதில்லை. எனவே ஏழை,எளிய மக்களின் மதச்சார்பற்ற ஆட்சி அமைந்திட நீங்கள் ஆதரவு தரவேண்டும்.

பிரித்துப் பார்க்கும் அரசியல்....
இந்து, இஸ்லாமியரை பிரித்துப் பார்க்கும் அரசியலை காங்கிரஸ் ஒருபோதும் நடத்தாது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications