ஏப்ரல் கடைசியில் தமிழக சட்டசபைத் தேர்தல்... மார்ச் 6ம் தேதி அறிவிப்பு?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே முதல் வாரத்தில் நடந்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அடுத்தமாதம் 6ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் பதவிக்காலம் வரும் மே 22ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆணையத்தின் பணி ஆகும்.
எனவே, தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

2 நாள் கூட்டம்...
இந்நிலையில், தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை...
இதில், 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக மார்ச் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக...
இந்தக் கூட்டத்தில் 5 மாநிலங்களில் எந்தத் தேதிகளில், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.

தேர்தல் தேதி...
இதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம் என்றும், தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தமாதம் 6ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications