EB New Tariff: 500 யூனிட்டுக்கு மேல்! 500 யூனிட்டுக்குள்! ஒரு unit-க்கு எவ்வளவு மின் கட்டணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்திருந்த நிலையில் புதிய மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்டப் பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் (TNEB) தற்போது முக்கியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

New EB Tariff

அந்த அறிக்கையில், "இலவச மின்சாரத் திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி கணக்கிடுவதற்கு ஏதுவாக, மின்வாரியத்தின் கட்டணக் கணக்கீட்டு மென்பொருளில் (Billing Software) தேவையான அனைத்துத் தொழில்நுட்ப மாற்றங்களும் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன. புதிய கூடுதல் மானிய விதிமுறைகளின்படி (Subsidy Rules) நுகர்வோரின் பயன்பாட்டைக் கணக்கிடும் வகையில் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு விழிப்புணர்வு: மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய கூடுதல் மானிய விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் குறித்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள உதவிப் பொறியாளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோரின் இரு மாத மின் பயன்பாட்டில் முதல் 200 யூனிட்கள் இலவசம் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் எவ்விதத் தவறும் நடந்துவிடக் கூடாது எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண முறை அமலுக்கு வருவதால், பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களுக்குப் பணியாளர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது புதிய மின் கட்டணம் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் 500 யூனிட்டுக்குள், 500 யூனிட்டுக்கு மேல் என பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

500 யூனிட் வரை

1 முதல் 200 யூனிட் வரை கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ 4.70 வசூலிக்கப்படும். அது போல் 401 முதல் 500 யூனிட் என்றால் ஒரு யூனிட்டுக்கு ரூ 6.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.

யூனிட்டுக்கு மேல்

1 முதல் 100 யூனிட்- கட்டணம் இல்லை. 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ 4.70, 401 முதல் 500 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.30, 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ 8.40, 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ 9.45, 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ 10.50, 1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ 11.55 என வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விவரங்கள் மே 10ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்துவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+