தென் மாவட்டங்களில் தலைவர்கள் முகாம்: களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: லோக்சபா தேர்தல் பிரச்சாரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் களைகட்டத்தொடங்கியுள்ளது. முக்கியத்தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.24ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க ,அ.தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தையும் தலைவர்கள் தொடங்கி விட்டனர்.

பா.ஜ.க கூட்டணியில்தொ குதி பங்கீடு இன்னும் நிறைவடைவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

தேமுதிகவில் தொகுதி பங்கீடு நிறைவடையாத போதிலும் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் துவக்கியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தி மு க பொருளாளர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். இரவு நெல்லை மாவட்டம் வருகிறார். நாளை 15 ம் தேதி மாலை 3 மணிக்கு தழையூத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கி ஆலங்குளம் ,அம்பை,களக்காடு வள்ளியூர்,நாங்குநேரி ,மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

பொதுக்கூட்டத்தில் பேச்சு

பொதுக்கூட்டத்தில் பேச்சு

சனிக்கிழமை இரவு பாளையம்கோட்டை ஜவகர் மைதானத்தில் நடக்கும் பொதுகூட்டத்தில் தி மு க வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து பேசுகிறார்.

தென்காசியில் ஸ்டாலின்

தென்காசியில் ஸ்டாலின்

மார்ச் 16 ம் தேதி தென்காசி லோக்சபா தொகுதியில் திமுக.கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

தூத்துக்குடியில் பிரச்சாரம்

தூத்துக்குடியில் பிரச்சாரம்

17 ம் தேதி துத்துக்குடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின், செய்துங்கநல்லூரில் தொடங்கி ஆழ்வார் திருநகரி, குரும்பூர் ,திருச்சந்தூர் ,காயல்பட்டினம் ஆத்தூர் ,ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 9 மணிக்கு துத்துக்குடியில் செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தி ஜெகனை ஆதரித்து பேசுகிறார்.

தூத்துக்குடியில் ஜெயலலிதா

தூத்துக்குடியில் ஜெயலலிதா

துத்துக்குடி அ. தி. மு. க வேட்பாளர் நட்டர்ஜி யை ஆதரித்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நாளை சனிக்கிழமை பிரசாரம் செய்கிறார் இதற்காக தனி ஹெலிகாப்டரில் துத்துக்குடி வரும் அவர் கதிர்வேல் நகரில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பேசுகிறார்.

தென்காசியில் பிரச்சாரம்

தென்காசியில் பிரச்சாரம்

தொடர்ந்து மார்ச்19 ம் தென்காசி தொகுதி அ. தி. மு. க வேட்பாளர் வசந்தி முருகேசனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா சங்கரன்கோவில் வருகிறார் .அங்கு தளவாய்புரம் செல்லும் சாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

விஜயகாந்த் பிரச்சாரம்

விஜயகாந்த் பிரச்சாரம்

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரத்தை துவக்குகிறார். மார்ச் 21ம் தேதி நெல்லை வரும் விஜயகாந்த் நெல்லை தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

தென்மாவட்டங்களில் விஜயகாந்த்

தென்மாவட்டங்களில் விஜயகாந்த்

தொடர்ந்து தென்காசி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ,தென்காசி கடையநல்லூர்,பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார் .மறுநாள் 22ம் தேதி துத்துக்குடி தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசுகிறார்.

அனல் பறக்கும் பிரச்சாரம்

அனல் பறக்கும் பிரச்சாரம்

நெல்லை ,தென்காசி,துத்துக்குடி ,தொகுதிகளுக்கு அடுத்து அடுத்து தலைவர்கள் வருகை காரணமாக லோக்சபா தேர்தல் களம் களை கட்டத்தொடங்கியுள்ளது உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+