அப்துல் கலாம் மறைவு: ஜூலை 30ல் தமிழகத்தில் கடையடைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாழக்கிழமை ( ஜூலை 30) தமிழகத்தில் கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும். அதேபோல் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் நேரத்தில் தமிழகம் முழுவதும் மவுன ஊர்வலமும் நடத்தப்படும்.

நாளை மறுநாள் கடையடைப்பு நடத்தப்படுவதால், நாளை நடைபெறவிருந்த அந்நிய உணவுகளுக்கு தடை விதிக்கக்கோரிய போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications