இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்.. பீதியை கிளப்பும் கோவை காலநிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

கோவை: தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமைழை கொட்டித் தீர்த்தது. போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெளுத்து வாங்கியது.
இதனால் கேரள மாநிலம் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது. 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல்வேறு மாநில அரசுகளும் கேரள அரசுக்கு நிதியுதவி அளித்தன.
[ இந்தியாவில் 18,000 பேரை கொன்றது.. 2004ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம்-சுனாமியை மறக்க முடியுமா? ]
இந்நிலையில் நாடு முழுவதும் இன்றுடன் தென் மேற்கு பருவமழை நிறைவடைய உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை
இதனிடையே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிகளவு இருக்கும்
அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளகாக ஏமாற்றி வந்த வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவாக நாகையில்
குறிப்பிட்ட மாவட்டங்கள் என இன்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகவே வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகளவாக நாகை மாவட்டம் 924 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிவை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக சென்னையில்
அதற்கு அடுத்த படியாக சென்னை 767 மில்லி மீட்டர் மழையளவை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் 667 மில்லி மீட்டர் மழையளவை பெறும் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஈரோட்டிலும்
மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை தனது சராசரி மழையளவான 328 மில்லி மீட்டருக்கு பதிலாக 363 மிமீ மழையை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் 314 மில்லி மீட்டருக்கு பதிலாக 370 மில்லி மீட்டர் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை ஆய்வு மையம்
இதேபோல் திருப்பூர் மாவட்டம் 281 மில்லி மீட்டரும் நீலகிரி மாவட்டத்தில் 462 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications