தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யுமாம்!
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஒரே இடத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழை பெய்யாதா என்றும் மக்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் வெப்பசலனத்தால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஒரே இடத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகத்தால் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சின்னக்கால்லாறில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications