யார் முதல்வர்? ஜெ.வுக்கு சமமான இடத்தில் ஸ்டாலின்... தமிழ் ஒன் இந்தியா வாசகர்கள் ஆதரவு.. வைகோ 3!
சென்னை: யார் முதல்வராக ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமமாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்துள்ளனர் நமது தமிழ் ஒன் இந்தியா வாசகர்கள்.
நமது தமிழ் ஒன் இந்தியாவின் கருத்து கணிப்பு பகுதியில்
இவர்களில் யார் முதல்வராக நீங்கள் ஆதரிப்பீங்க?
கருணாநிதி
ஜெயலலிதா
விஜயகாந்த்
ஸ்டாலின்
வைகோ
என நேற்று கேட்கப்பட்டது. இன்று பிற்பகல் 2.45 மணிவரை மொத்தம் 8,900 பேர் வாக்களித்துள்ளனர்.

கருணாநிதிக்கு 6%
இதில் இன்று சனிக்கிழமை பகல் 2.45 மணிவரை 5 முறை தமிழக முதல்வர் பதவி வகித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வெறும் 6% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெ- ஸ்டாலின் சம போட்டி
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஸ்டாலினுக்கும் சமமான ஆதரவை வாசகர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் இருவருக்குமே சமமாக 29% ஆதரவும் சில நேரங்களில் ஜெயலலிதாவுக்கு 29% ஸ்டாலினுக்கு 30% என்ற ஆதரவும் ஜெயலலிதாவுக்கு 30%; ஸ்டாலினுக்கு 29% எனவும் மாறி மாறி இருந்து வருகிறது.

3வது இடத்தில் வைகோ
அதேபோல் 3வது இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு கொடுத்துள்ளனர் நமது வாசகர்கள். அவருக்கு 20% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சறுக்கும் விஜயகாந்த்
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு 15% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பொதுவாக அண்மைக்காலமாக ஊடகங்களில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் விஜயகாந்த் மீது நம்பகத்தன்மையற்ற நிலை இருப்பதை நமது வாசகர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவுக்கு ஆப்பு
மேலும் மிஷன் 234 அதிமுகவின் கனவு நனவாகுமா என்ற கருத்து கணிப்பில் மொத்தம் 12,400 பேர் பங்கேற்றனர்.
இதில் நிச்சயமாக இல்லை என 51% பேர் தெரிவித்துள்ளனர். மழை மண்ணை அள்ளிப்போடுவிட்டது என 20% பேரும் அடுத்த முறையும் அம்மாதான் வருவார் என 30% பேரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications