மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டுவிழா விளம்பரத்தில் மோடி படம் இல்லை: தமிழிசை குற்றச்சாட்டு
சென்னை: மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டு விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இல்லாததன் மூலம் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை தமிழக அரசு மறைப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

இந்த விழா தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. இதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மெட்ரோ ரெயில் திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் நிறைந்த திருவொற்றியூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதாவும் பல போராட்டங்களை நடத்தியது நினைவு கூறத்தக்கது. மக்களின் கோரிக்கையை மதித்து மத்திய அரசு இந்த திட்டத்தை விரைவுபடுத்தி ஒப்புதல் வழங்கி நிதியும் ஒதுக்கி இருக்கிறது.
மத்திய அரசின் பங்களிப்புடன் நடைபெறும் திட்டத்தில் பிரதர் மோடியின் படம் இடம் பெறாதது ஏன்?
அரசு விளம்பரங்களில் முதல்-மந்திரிகள் படம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய போது பெருந்தன்மையுடன், மாநில முதல்வர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள். அவர்கள் படம் இடம் பெறவேண்டும் என்று கருத்து தெரிவித்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.
அப்படிப்பட்ட மத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது. வருங்காலங்களில் மத்திய அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டங்களில் பிரதமர் படம் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி தனது படம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பமாட்டார். ஆனால் மத்திய அரசு உதவி செய்யும் திட்டங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த பிரதமர் படம் அவசியம். இனிவரும் நிகழ்வுகளில் இந்த மாதிரியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications