ஜல்லிக்கட்டுக்கு தடை... உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கவலை தருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை: 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வீட்டு விலங்கான காளையை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் வீட்டு விலங்கான காளையை கொடுமைப்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹித்டன் நாரிமன் கூறினர். இது மதம் தொடர்பான விளையாட்டு அல்ல என்று கூறியதோடு தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நலஅமைப்பினர் அவர்களது வாதத்தை எடுத்து வைத்துள்ளனர். அதேசமயத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என மத்தியஅரசு தனது வாதத்தை எடுத்து வைத்தது. தமிழக அரசும் தனது வாதத்தை எடுத்து கூறியது. எனினும் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது கவலை தருகிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு விலங்கு நல ஆர்வலர்களே காரணம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
எங்களின் கொள்கை ரீதியான முடிவு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதுதான். சட்டரீதியாக போராட்டம் நடத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications