ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்... விஜயகாந்த்தை சந்தித்தார் தமிழிசை
சென்னை: பாஜக கூட்டணியில் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தராஜன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் போய்ச் சந்தித்துப் பேசினார்.
பாஜக கூட்டணியில் விஜயகாந்த் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமண விழாவுக்கு வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவை சந்திக்காமலயே போய் விட்டார் விஜயகாந்த். இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேலும் ஒரு குழப்பமாக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வீடு தேடிப் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து இதுவரை பாஜக விளக்கவில்லை. தமிழக பாஜக தலைவர்களே இதை எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடலாம் என்று ஒரு தகவல் வெளியாகியது. மேலும், திமுகவும், தேமுதிகவின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இத்தேர்தலில் பாஜகவும் போட்டியிடுகிறது. தனது வேட்பாளரை இறுதி செய்து விட்டாலும், அதை அறிவிக்க முடியாமல் உள்ளது. காரணம், முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் தேமுதிகவின் போக்கால்.
ஏற்கனவே பாஜகவுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது ஆதரவை தெரிவித்துவிட்டது. புதிய நீதிக்கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வுடனான நல்லுறவை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதால், அவர்களும் ஆதரவை தொடர்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தேமுதிகதான் எதையும் பேசாமல் கம்மென்று இருக்கிறது. இந்த நிலையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளருமான மோகன்ராஜூலு விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இன்று தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கோயம்பேடு விரைந்தனர். அங்கு தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக அவர்கள் விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications