விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகளா...?? கொந்தளிக்கும் தமிழிசை!!
விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விநாயகர் சிலைகள் வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் நீக்க வேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வைக்க முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில், இந்து மத நடவடிக்கையை முடக்குவதே ஆட்சியாளர்களின் கவனம் உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications