பாவிகளுக்கு இடமிருக்கும் போது காவிகளுக்கு இடமிருக்காதா?- தமிழிசை சவுந்தரராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும் பொழுது காவிகளுக்கும் இடம் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக இளைஞரணி சார்பில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.

Tamilisai's poser to Tamil Nadu political parties

பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாரக இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் காவிகளுக்கு காவிகளுக்கு இடமிருக்கிறதா? இடமிருக்கிறதா என்றால், தமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும் பொழுது காவிகளுக்கும் இடம் கிடைக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணியின் தொடக்க விழாவில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்த அவர், தமிழக கிராமப்புறங்களில் இருந்து மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவிகிதமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN BJP president Tamilisai Soundarajan led a protest in Chennai to close Tasmac shops all over the state today.
Please Wait while comments are loading...