ஜூன் 16, 17 தேதிகளில் பாஜக மாநில செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது...

தமிழகத்தில் பாஜகவின் வருங்கால செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
2016-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளும் வகையில் மாநில செயற்குழு கூட்டம் அமையும்.
மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications