ஆட்சி முடியும்போது தான் நத்தம் விஸ்வநாதனுக்கு விழிப்பு வந்துள்ளது: தமிழிசை
சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தற்போது தான் விழித்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் மின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாமல் போனது. இதற்கு மத்திய அரசே காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் இருந்த இடம் தெரியவில்லை. தற்போது தான் விழித்திருக்கிறார். தான் ஒரு அமைச்சர் என்ற நினைவு அவருக்கு வந்துள்ளது.
ஆட்சி காலம் முடிய உள்ள நேரத்தில் மின் உற்பத்தி பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. தமிழகத்தில் மின் வெட்டு உள்ளது என்று கூறியபோது வயரை தொட்டுப்பாருங்கள் ஷாக் அடிக்கும் என்று கிண்டலாக கூறியவர் தான் நத்தம் விஸ்வநாதன்.
மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகளால் தற்போது அதிமுகவுக்கு ஷாக் அடிக்கிறது. இந்த ஷாக் இதோடு நின்றுவிடாமல் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications
