For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீலிடம் கேட்டறிக.. ராகுலுக்கு தமிழிசை பதிலடி

ஸ்டெர்லைட் வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று ராகுலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ

    சென்னை: ஸ்டெர்லைட் வரலாற்றை உங்கள் கட்சியின் பொய் வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று ப சிதம்பரத்தை கடுமையாக விமர்சனம் செய்து ராகுலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

    ஸ்டெர்லைட் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணி சென்ற மக்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு யார் காரணம் என்று பாஜக, அதிமுக ,திமுக என 3 கட்சிகளும் மாறி மாறி விரலை காட்டுகின்றன.

    ப சிதம்பரம் கண்டனம்

    தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ப சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?

    ராகுல் காந்தி கண்டனம்

    துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் வெளியிட்ட பதிவில், தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை
    நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றார் அவர்.

    பொய் வக்கீல்

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டரில் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஆர்எஸ்எஸ் காரணம் மோடியின் துப்பாக்கி என உளறும் ராகுல் காந்தியைக் கண்டிக்கிறோம். மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட் ஆலை வந்த வரலாற்றை உங்கள் கட்சியின் பொய்வக்கீல்- வெளிநாட்டு சொத்தை மறைத்த-ப.சிதம்பரம் இடம் கேட்டறிக. மக்களின் துயரம்வந்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் என்று தமிழிசை தெரிவித்தார்.

    முன்னாள் சட்ட ஆலோசகர்

    முன்னாள் சட்ட ஆலோசகர்

    ப. சிதம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை வெளியிட்ட டுவீட்டில் பொய்யர் புளுகர் புழு வக்கீல் ப சிதம்பரம் பாஜக எங்கே துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தியது? நாங்கள் கண்டித்த செய்தி தங்கள் மோடி எதிர்ப்பு கண்ணாடியில் தெரியவில்லையா? ராகுல் வழியில் இதுபோன்ற உளரல்களா?ஸ்டெரிலைட்ஆலையின் முன்னாள் இயக்குநர் சட்ட ஆலோசகர் நீங்கள்தானே? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    பேசியாக வேண்டும்

    பேசியாக வேண்டும்

    பாஜக மீது ப. சிதம்பரம் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க ப. சிதம்பரமே சரியான நபர். ப.சிதம்பரம் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர்களின் ஒருவராக இருந்துள்ளார். அது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் குறித்து பேசியாக வேண்டும் என்று சு.சுவாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilisai Soundararajan condemns Rahul Gandhi in the issue of Tuticorin incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X