வாஜ்பாய் மறைவு: இதயமே வெடித்து விட்டது.. தமிழிசை செளந்தரராஜன் வேதனை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

Tamilisai Soundararajan condolences for Vajpayee death

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இதயமே வெடித்து விட்டது. இமயமே சரிந்து விட்டது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னைப் போன்றவர்களையெல்லாம் பாஜகவின் பால் ஈர்த்தவர் வாஜ்பாய். காங். அல்லாத பிரதமர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த வரலாறு வாஜ்பாய்க்கு மட்டுமே உண்டு.

23 கூட்டணித் தலைவர்களை பிரச்சினை இல்லாமல் இட்டுச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர் வாஜ்பாய். வல்லரசு நாடாடக இந்தியாவை உருவாக்க பொக்ரானில் அணுகுண்டுச் சோதனை நடத்தியவர் வாஜ்பாய். வாஜ்பாய் காலத்தில் ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

வளர்ச்சியின் நாயகன் வாஜ்பாய். ஊழல் குற்றச்சாட்டே இல்லாத தலைவர் வாஜ்பாய். எல்லோராலும் அணுகக் கூடிய நல்ல தலைவர் வாஜ்பாய். அவரது இயக்கத்தை நிறுத்தி எங்களது இயக்கத்தையும் நிறுத்தி விட்டார் வாஜ்பாய்..'' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+