தமிழிசை மகன் திருமணம்: கருணாநிதி, ஸ்டாலின், பிரேமலதா, திருமாவளவன் நேரில் வாழ்த்து
சென்னை: தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை - டாக்டர் சவுந்தரராஜன் தம்பதியரின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும் கோவையைச் சேர்ந்த செல்வராஜ் - கோகிலா தம்பதியின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் திருமணம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மணமக்களை நேரில் வாழ்த்தினார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் மணமக்களுக்கு பூங்கொத்தும், பரிசு பொருளும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி, பாஜக தலைவர்கள் இல.கணேசன், எஸ்.மோகன்ராஜூலு மற்றும் விஜிபி நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினர்.

பின்னர் மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சுதிஷ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்,பாஜக எச்.ராஜா, காங்கிரஸ் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications