நீட் தேர்வு முறை வெற்றி.. சந்தோசமாக வாழ்த்து சொன்ன தமிழிசை.. கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!
நீட் தேர்வு எழுத சென்று இருக்கும் மாணவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்ன தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மக்கள் கோபமாக பதில் அளித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத சென்று இருக்கும் மாணவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்ன தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மக்கள் கோபமாக பதில் அளித்துள்ளனர்.பாஜகவின் மத்திய அரசு செய்யும் தமிழின விரோத செயல்களை மோசமாக கண்டித்துள்ளனர்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ அமைப்பு நடத்திய இந்த மோசமான தாக்குதலால் பல ஆயிர மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை வாழ்த்து
இந்த நிலையில்தான் மத்திய அரசு மீது மக்கள் கோபமாக இருக்கும் சமயத்தில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதில் ''நீட் எழுதும் 107288 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்துகள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் 30 சதவிகிதம் பேர் அதிகமாக எழுதுகிறார்கள் என்பதே நீட் மீது பெரிய நம்பிக்கை அளிக்கிறது. மோடியின் அரசு உங்கள் எல்லோரையும் மிகவும் நேர்மையாக மெரிட் முறையில் கோடி கணக்கில் காசு கொடுக்காமல் மருத்துவர் ஆக வகை செய்துள்ளது'' என்றுள்ளார்.
|
எந்த வகையில் நியாயம்
இவர் ''வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து தமிழக மாணவர்கள் பல இன்னல்கள் படுவதை கண்டிக்காமல் வாழ்த்து சொல்வது எந்த வகையில் நியாயம்'' என்றுள்ளார்.
|
தாமரை மலருமா
இவர் கோபத்தில் ''இனிமே தாமரை மொட்டு கூட விடாது தமிழ்நாட்ல..'' என்று கிண்டல் செய்துள்ளார்.
|
வெற்றி
இவர் ''உங்க திட்டம் வென்றது...வெற்றி களிப்பு உங்களுக்கு....நீட் வேண்டாம் என்று போராடிய மக்களை தேர்வு மையங்களுக்காக போராட வைத்து நீட்டை தினித்து விட்டீர்களே பலே'' என்றுள்ளார்.
|
எப்படி சொல்ல முடிகிறது
இவர் ''வருத்தமாக இருக்கிறது. நீங்கள் உண்மையிலேயே டாக்டர்தானா? உங்கள் மதிப்பீடுகள் மிகவும் மோசமாக உள்ளது. மக்களுக்கு நீட் தேர்வை தவிர மருத்துவம் படிக்க வேறு வாய்ப்பு இருக்கிறதா? இந்த நிலையில் எப்படி நீட் தேர்வு வெற்றி பெற்றுவிட்டதாக கூறுகிறீர்கள். நீட் கட்டாயம் இல்லை என்று கூறிவிட்டு, அதன்பின் அது வெற்றியா இல்லையா என்று கூற நீங்கள் தயாரா?'' என்றுள்ளார்.
|
உங்களுக்கு தெரியுமா
இவர் ''வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மனவருத்ததால் தேர்வு எழுத செல்ல முடியாத ஏழை மாணவர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா?'' என்று கேள்வி கேட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications